Monday, 12 January 2015

                                      TSR கமிட்டி சொல்லுவது என்ன ? 

                                                      விஷம் தடவிய இனிப்பா ?

அஞ்சல் துறையில்  சேமிப்பு வங்கி ,இன்சூரன்ஸ் .பார்சல்கள் .இதர நிறுவன பில்கள் ,இதர அரசு பணிகள் இந்த ஐந்து சேவைகளையும் துணை வர்த்தக கம்பெனிகளாகவும் ,மீதி உள்ள மெயில் சேவையை மட்டும் ஹோல்டிங் கம்பெ னியாகவும்  மாற்ற TSR கமிட்டி பரிந்துரைத்துள்ளது .இந்த ஐந்து துணை கம்பெனிகளின் பணிகள் குறித்து இவ்வாறு பிரிக்க பட்டுள்ளது .

1. சேமிப்பு வங்கி 

                         சேமிப்பு வங்கி மற்றும் நிதித்துறை சேவைகள் இந்திய அஞ்சல் வங்கி என்ற அமைப்பின் கீழ் செயல்படும் .மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வங்கி கிளை என்பதாகவும் .இதர 140000 கிராமப்புற அஞ்சலகங்கள் மேற்கண்ட அஞ்சல் வர்த்தக உறவு கொண்டதாகவும் இருக்கும் .

2.PLI /RPLI 

ஆயுள் காப்பீடு துறை என்பது ஆயுள் இன்சூரன்ஸ் ,பயிர் இன்சூரன்ஸ்மருத்துவம் ,விபத்து இன்சூரன்ஸ் மற்றும் பொது இன்சூரன்ஸ் போன்றவற்றை உள்ளடக்கிய தனி வர்த்தக அமைப்பாக இருக்கும் .அதாவது PLI அரசு ஊழியர்களுக்கு மட்டும் என்பது மாறி அனைவருக்கும் விரிவு படுத்தப்படும் .

3.பார்சல் /விரைவு தபால்கள் 

                                 பார்சல் /விரைவு தபால்கள் .பாக்கெட்டுகள் மற்றும் பார்சல் /விரைவு தபால்கள் இ -வர்த்தக பிரிவு என்பது முழுவதும் பொதுத்துறை சார்ந்த வர்த்தக அமைப்பாக தனது சொந்த வர்த்தக அடையாளத்துடன் சர்வதேச அளவில் இதர   இ -வர்த்தக  நிறுவனங்களுடன் இனைந்து செயல்படும் 

4. இதர நிறுவனங்களின் சேவைகள்

                       இதர நிறுவனங்களின் சேவைகள் என்பது இதர நிறுவனங்களின் பில்களை வசூல் செய்தல்பட்டுவாடா செய்தல் ,வர்த்தக  ரீதியில்  அனைத்து துறைகளுக்கும் தகவல்களை அளித்தல் போன்ற மூன்றாம் நபர் பொருட்களை விநியோகித்தல் ஆகிய பணிகள் 

5. அரசு பணிகள் 
                         ஆதார் ,ரேசன் கார்டுதேசிய சேமிப்பு பத்திரங்கள் ,கிசான் பத்திரங்கள் ,விசாரணை மற்றும் சான்றிதழ் வழங்கும் சேவைகள் ,முறைபடுத் துத்தல்  ,மேற்பார்வை செய்தல் போன்றவை 

                         மேற்கண்டவாறு அஞ்சல் இலாகாவை ஹோல்டிங் கம்பனியாகவும் ,இதர சேவைகளை துணை வர்த்தக  கம்பனியாகவும் அமைப்பதற்கு  புதிய அஞ்சல் சட்டம் இயற்றப்படும் என்றும் இந்த குழு பரிந்துரைத்துள்ளது .
                         ...........               மெல்ல அஞ்சல் துறை இனி ....
 

SOURCE :NFPE TIRUNELVELI

No comments:

Post a Comment