பெட்ரோல் பங்க்-குகளில் அஞ்சல் பெட்டி வசதி அறிமுகம்
பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பெட்ரோல் பங்க்-குகளில் அஞ்சல் பெட்டி வசதியை ஏற்படுத்தி தரும் நடவடிக்கையில் அஞ்சல் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்ட தகவல்:
வாடிக்கையாளர்கள் அஞ்சல் பெட்டிகளை தேடிச் செல்வதை தவிர்க்கும் விதமாக இந்திய அஞ்சல் துறை, பெட்ரோல் பங்க்-குகளில் அஞ்சல் பெட்டிகளை வைத்துள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் அமர்ந்தவாறே தபால்களை அஞ்சல் பெட்டிகளில் போடலாம்.
வாகனங்கள் பெட்ரோல் பங்க்குகளில் இருந்து வெளியே வரும் வழியில் இப்பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகளில் வைக்கப்பட்டு இருப்பதால் அஞ்சல் பெட்டிகள் மற்றும் அதன் உள்ளே உள்ள அஞ்சல்களும் பாதுகாப்பாக இருக்கும்.
தற்போது, தெற்கு தேனாம்பேட்டை, வியாசர்பாடி, கீழ்பாக்கம், திருவான்மீயூர், ரத்னகிரி (அரக்கோணம்), லாஸ்பேட், முதலியார்பேட் (புதுச்சேரி), விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தேர்வு செய்யப்பட்ட பெட்ரோல் பங்க்குகளில் சோதனை அடிப்படையில் இப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு பொதுமக்கள் அளிக்கும் ஆதரவைத் தொடந்து மேலும் பெட்ரோல் பங்க்குகளில் அஞ்சல் பெட்டிகள் வைக்கப்படும் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
Source : Tamil Hindu
Source : Tamil Hindu
No comments:
Post a Comment