மக்களின் ஜனாதிபதி.அப்துல்கலாம் அவர்களின் இறுதிச் சடங்கு இன்று (30-07-2015) காலை நடைபெறும். முதலில் அவர் வீட்டில் சடங்குகள் நடத்தப்பட்டு பின்னர் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு உடல் எடுத்துச் செல்லப்படும்.
அங்கு இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்படும். அதன் பிறகு அப்துல்கலாம் உடல் தங்கச்சி மடம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்துக்கு கொண்டு செல்லப்படும்.
அங்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்–மந்திரிகள் இறுதி அஞ்சலி செலுத்துவார்கள். அதன் பிறகு அப்துல்கலாம் உடல் 11 மணியளவில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். அந்த இடத்தில் அப்துல் கலாமுக்கு நினைவிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment