Tuesday, 7 July 2015

பள்ளி மாணவிகள் பாதுகாப்பிற்காக போஸ்ட் கார்டு திட்டம்: எஸ்.பி. தகவல்

நெல்லை: ஹலோ போலீஸ் சேவையை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு திட்டத்தை எஸ்.பி. விக்ரமன் தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்ட எஸ்.பி.யாக விக்ரமன் பொறுப்பு ஏற்றது முதல் பொதுமக்கள் அனைவரும் அவரிடம் நேரடியாக புகார் தெரிவிக்கும் வகையில் ஹலோ போலீஸ் சேவையை அவர் துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான குற்றங்கள் தடுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு அவர்களுககு எஸ்.பி.யின் முகவரி அச்சிடப்பட்ட போஸ்ட் கார்டுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக கங்கைகொண்டானில் உள்ள பெண்கள் பள்ளியில் போஸ்ட் கார்டு வழங்கப்பட்டது. இது குறித்து எஸ்.பி. விக்ரமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாணவிகளுக்கு சமுதாயத்திலும், பள்ளிகளிலும் நடக்கும் தீமைகளை தடுக்கும் பொருட்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவிகள் புகார் குறித்து தீவிர விசாரணை நடத்திய பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகள் இந்த திட்டம் மூலம் தங்களுக்கு மட்டுமல்லாது தங்கள் பகுதியில் நடக்கும் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் போஸ்ட் கார்டு மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றார். ஹலோ போலீஸ் திட்டம் தொடங்கப்பட்ட ஆரம்ப நிலையிலேயே மருத்துமவனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Source : http://tamil.oneindia.com/news/tamilnadu/post-card-scheme-help-school-girls-be-safe-230481.html

No comments:

Post a Comment