SOURCE : NFPE TUTICORIN DIVISION (http://nfpettn.blogspot.in/)
பெண் என்றால்........ உங்கள் சிந்தனைக்கு!
முன்குறிப்பு: விஷயம் வேறு ஒன்றும் இல்லை. கடந்த முறை, கட்டாயப் படுத்தி DEPUTATION அனுப்பியதால் ஒரு அலுவலகத்திற்கு ஏற்பட்ட சிக்கல்களை பல பக்கங்களில் எழுதி இருந்தோம். இந்த முறை, கட்டாயப் படுத்தி, ஒரு ஊழியரை TRAINING அனுப்ப முயற்சி செய்ததால், ஏற்பட்ட கஷ்டங்களை பல பக்கங்களில் எழுதி உள்ளோம். அலுவலக நலன்தான், நிர்வாகத்திற்கு முக்கியமே தவிர, ஊழியர் கஷ்டங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தால் நிர்வாகம் நடத்த முடியாது என்பதாலும், அந்த TRAININGஏற்பாடு, மாற்றித் தரப்பட்டது என்பதாலும், சில பக்கங்களில் முடித்துக் கொள்ளலாம் என நினைத்தோம். ஆனால், சுருங்க சொல்லி விளங்க வைக்கும் கலை இன்னும் நமக்கு கை வரவில்லை!!!.
" நல்லதை சொல்லுகிறோம்! இங்கு
நடந்ததை சொல்லுகிறோம்!
அதை காணவும் கண்டு நாணவும்
உமக்கு தலை எழுத்து என்றால்
உம்மை தாங்கிட நாதியுண்டோ?"
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
ஆணும் பெண்ணும் சமம் என்கிறார்கள்!. சட்டம் இருக்கிறதாம்!. மீறுபவர்கள் மீது கடுமையாக நடிவடிக்கை எடுக்கப் படுமாம்!. ஆனால், ஆணுக்கு ஒரு நீதி!, பெண்ணுக்கு ஒரு நீதி! என்பதுதான் காலம் காலமாக கடைபிடிக்க பட்டுவரும் நியதி. அதுதான் நடைமுறை. அதுதான் யதார்த்தம்.இயற்கை இருவரையும் சமமாக தான் படைத்திருக்கிறது.(அதிலும் ஒரு பாரபட்சம். பெண்ணால் மட்டும்தான் குழந்தையை சுமக்க முடியும். பெற்று தர முடியும்.) இந்திய சமுதாயத்தில், தமிழ் பண்பாட்டில், ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். “ பல தாரம் மணந்து கொள்ளலாம். ஒழுக்கம் தவறலாம். குடிக்கலாம். சூதாடலாம். மனைவியை பணயம் வைக்கலாம். மனைவியை தீ குளிக்க சொல்லலாம். பொறுப்பில்லாமல் இருக்கலாம். சந்நியாசம் பெற்றுக் கொள்ளலாம்”. ஆனால், பெண் இப்படிதான் இருக்க வேண்டும், இப்படிதான் நடந்து கொள்ளவேண்டும் என பல கட்டுப்பாடுகள், சாஸ்திரங்கள் உள்ளன. “தற்காத்து தற்கொண்டான் பேணி.....” என்று பெண் இப்படிதான் இருக்க வேண்டும் என வள்ளுவனில் இருந்து, குப்பை அள்ளுபவன் வரை சொல்லுகிறார்கள். எதிர்பார்க்கிறார்கள்!. (இப்படிதான் இருக்க வேணும் பொம்பளை! இங்கலீஷ் படித்தாலும் இந்த தமிழ் நாட்டிலே!..............)
(இன்றைக்கு - ஓடிப் போகும் பெண், குடும்பங்களை குலைக்கும்(பிரிக்கும்) சகோதரிகள், கணவனை கொலை செய்யும் மனைவி, பெற்ற மகளை கொல்லும் தாய் என விதிவிலக்குகள் இருந்தாலும், பெரும்பாலும் பெண்கள்தான் பொறுப்பை சுமக்கிறார்கள்).
சமையல் செய்வது, குழந்தை வளர்ப்பு, குடும்ப பொறுப்பு இவை யாவும் பெண்களை நம்பித்தான் இருக்கிறது. இல்லை என்று வாதாடலாம். ஆண்களும் சமையல் செய்கிறார்கள், குடும்ப பொறுப்பை சுமக்கிறார்கள், என சுட்டிக் காட்டலாம். நாம் சொல்வது பெரும்பான்மையைதான். பெண்களுக்கு என்று பிரத்யோக பொறுப்புகள் இருப்பதை போல், பிரத்யோக பிரச்சினைகளும் இருக்கின்றன என சுட்டிக் காட்டுவதுதான் நம் நோக்கம்.
அப்படி இருக்கும் பொழுது, பெண்ணை, பெண் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் நம் கோரிக்கை. ஆனால்,பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருக்கிறார்கள் என்பது தான் கொடுமை. ஆண், அனுசரணையாக நடந்து கொள்கிறானா? புரிந்து கொள்கிறானா? என்பது இங்கே,இப்பொழுது பிரச்சினை இல்லை. பெண் புரிந்து கொள்ள மறுக்கிறாள். தான் பட்ட கஷ்டம், இன்னொரு பெண் படக்கூடாது என பெண் நினைப்பதில்லை என்பது தான் பிரச்சினை. நான் படாத கஷ்டதையா, இவள் பட்டு விடப் போகிறாள் என அலட்சியமாக நினைப்பதும், நான் கஷ்டப்படும் பொழுது யாரும் வரவில்லையே , நான் மட்டும் பிறர் கஷ்டத்தை பற்றி ஏன் கவலைப் பட வேண்டும் என சிந்திப்பதும் தான் சிக்கல்களுக்கு காரணம். “TRAININGபோட்டால் போக வேண்டியதுதானே!” என்றும் “சம்பளம் வாங்கவில்லையா? LET THEM GO!” என சொல்வதும் பெண்ணாகத்தான் இருக்கிறது.

முன் குறிப்பில் சுட்டிக் காட்டி இருந்தாலும், என்ன விஷயம் என்று தெளிவாக சொல்லாமல், விவரித்துக் கொண்டே போவதால், உங்களுக்கு புரியாமல் இருக்கலாம்,எரிச்சல் கூட வரலாம். எனவே விஷயத்தை சொல்லி விடுகிறோம். ஒரு நாள், மதியம் மூன்று மணி அளவில், ஒரு ஊழியரைக் கூப்பிட்டு, நாளைக்கு நீ மதுரைக்கு TRAINING ஆறு நாட்கள் செல்லவேண்டும் , MAIL அனுப்பப் பட்டுள்ளது என சொன்னது தான் பிரச்சினை. கடைசி நேரத்தில் கழுத்தை பிடித்து தள்ளுவது போல் உத்திரவுகள் இடப்படுவதுதான் பிரச்சினை!.
குடும்ப பிரச்சினை, குழந்தை பொறுப்பு, திடீரென்று போக சொன்னால் வீட்டில் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதால் அந்த ஊழியர் , மாற்றி தர முடியுமா? என கேட்டதற்கு, "TRAINING HAND இல்லை, ஆள் கொடுங்கள்" எனக் கேட்பது.“TRAINING போட்டால் போக மறுப்பது, இப்படி எல்லோரும் சொன்னால், எப்படி ARRANGEMENT போடுவது”. எனவேTRAINING போய்தான் ஆகவேண்டும் என நிர்வாகம் கடுமையாக சொல்லிவிட்டது. வேறு வழியில்லாமல், தொழிற்சங்கத்தை அணுகி, தன்னுடைய கஷ்டங்களை சொல்லி, வேறு ஆள் அனுப்ப ஏற்பாடு செய்ய முடியுமா? என அந்த ஊழியர் கேட்டுக் கொண்டார். “உங்கள் அலுவலகத்தில், வேறு யாராவது போக தயாராக இருக்கிறார்களா? நீங்களே உங்கள் பிரச்சினையை நேரிடையாக சொல்லி மாற்றி கொள்வதுதான் நல்லது. தேவையிலாமல் தொழிற்சங்கம் தலையிட்டு பிரச்சினைகளை பெரிது படுத்துவதாக , நிர்வாகம் நினைப்பதால், உங்கள் அலுவலகத்திலும், நிர்வாகத்திடமும் நீங்களே பேசுங்கள்” என சொன்னோம். பொறுப்பை தட்டிக் கழிப்பதாக அந்த ஊழியருக்கு கோபமும், எரிச்சலும் கூட வந்திருக்கலாம்.அழாத குறையாக “ அலுவலகத்தில் யாரும் போக தயாராக இல்லை, நிர்வாகமும் ஏற்றுக் கொள்ள மறுப்பதால் தான் உங்களிடம் சொல்ல வேண்டி இருக்கிறது” என குறை பட்டுக் கொண்டதால், நிர்வாகத்திடம் பேச வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.

நிர்வாகமோ, “ஏன் அந்த ஊழியர் போக மறுக்கிறார்?. SPM-ஐMAIL அனுப்ப சொல்லுங்கள். SSP-யிடம் கேட்டுதான் முடிவு செய்ய வேண்டும்” என்றது. SPM-ஐ தொடர்பு கொண்டோம். அவர் உடனே பதறி, இப்பொழுதுதான் SSP பேசினார். "ஆள் இல்லை என மெயில் அனுப்ப வேண்டியது, TRAINING போக சொன்னால் மறுப்பது. என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். உடனே யாராவது ஒருவரை உங்கள் அலுவலகத்தில் இருந்து அனுப்புங்கள்" என சொல்லி விட்டார். என்னை ஏன் கோபித்துக் கொள்கிறார் எனத் தெரியவில்லை. எனவே நான்MAIL அனுப்ப முடியாது என சொல்லிவிட்டார். எனவே, வேறு வழியில்லாமல், அந்த ஊழியரிடம், "நேரில் சென்று உங்கள் கஷ்டத்தை சொல்லுங்கள்" என்றோம். நான் வேலையை முடிக்கவே 7 மணிக்கு மேல் ஆகிவிடும். யார் இருப்பார்கள். எப்படியாவது மாற்றி கொடுங்கள் என்றார்.
திரும்பவும் ASP-இடம் பேசினோம். “ஊழியரும் மெயில் கொடுக்க மாட்டார். SPM-ம் மெயில் கொடுக்கமாட்டார். எல்லாவற்றையும் போனில் பேசி முடிக்க வேண்டும் என்றால் எப்படி? என்னைத்தான் மாட்டிவிடப் பார்க்கிறீர்கள். FILE HEALTHYஆக இல்லாமல் நான் எதுவும் செய்ய முடியாது” என்றார். வேறு வழியில்லாமல் இரவு SSP-யிடம் தொடர்பு கொண்டு கோட்ட செயலர் பேசினார். "இது நல்ல பழக்கம் இல்லை. முதல் முறை என்பதாலும், பதிலுக்கு ஆள் இருப்பதாலும் மாற்றி தருகிறேன். அந்த ஊழியரை MAIL கொடுக்க சொல்லுங்கள்” என்றார். எப்படியோ பிரச்சினை முடிந்தால் சரி என்று ஊழியரை உடனே மெயில் கொடுக்க சொன்னோம். பிரச்சினையும் முடிந்தது.

பிரச்சினை முடிவதற்குள் எத்தனை மனக்குறைகள்,கோபங்கள், குற்றசாட்டுக்கள். பழிவாங்கப் படுவதாக ஊழியர்களுக்கு மனக்குறை!. தேவையில்லாமல் தலையிட்டு பிரச்சினையை தொழிற்சங்கம் பெரிது படுத்துவதாக நிர்வாகத்திற்கு கோபம்!. ஒரு சிலருக்கு ஓடி வருவார்கள். ஒரு சிலரை கண்டு கொள்வதேயில்லை என்பது சிலரது குற்றச்சாட்டு!. "யதார்த்தவாதி வெகுஜன விரோதி" என்பதை போல் எல்லோருடைய எரிச்சலையும் வாங்கி கட்டி கொள்வதற்கு நாம்.
சரி! சரி! நமக்கு எதற்கு இந்த பொல்லாப்பு!(பொழைப்பு!). வழக்கம் போல் பாடலோடு முடித்துக் கொள்வோம். "நாய் வாலை நிமிர்த்தி வைக்க அ.ஆன மட்டும் ப.பா. பாடுபட்டேன். சொந்தம் இல்லே. பந்தம் இல்லே. இங்கே, ஒன்னை ஒன்னு பார்க்காது. ஒன்னுகொன்னு சேராது . ஒன்றோடு ஓன்று பேசாது. ஒன்பது ரகம். நவக்கிரகம். நீங்க...............................”
குறிப்பு: பிரச்சினையின் முடிவு இருக்கட்டும். ஆரம்பம் எது என பார்ப்போம். ஆள் பற்றாகுறையால் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் பொழுது, அதை அதிகப் படுத்துவது போல் OPENசெய்யப்பட்ட அனைத்து LOCAL WPCTC -களையும் மூட வேண்டும் என்பதுதான் நம் நெடுநாளைய கோரிக்கை. POLICY MATTER, DIRECTORATE உத்திரவு என சொல்லி நிர்வாகம் அதை கொண்டு கொள்வதே இல்லை. ATLEAST TRAINING SCHEDULE-வது முன்கூட்டியே அறிவிக்கப் படவேண்டும் என்ற நம் கோரிக்கையையும் காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள். ஆகஸ்ட் மாதத்தில் கடைசி 10 நாட்கள் நாம் நிம்மதியாக இருந்தோம். எந்த WPCTC-யும் செயல்படவில்லை. என்ன காரணம்? தெரியாது. செப்டம்பர் 2ம் தேதி STRIKE என தெரிந்தும், திடீரென்று 1ம் தேதி காலையில் 2ம் தேதிக்கானSCHEDULE அனுப்பப் படுகிறது என்ன காரணம்? தெரியாது. கடைசி நேரத்தில் சொல்வதால் ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி எடுத்து சொல்லியும் மேலிடம் கண்டு கொள்வதாக தெரியவில்லை. அவர்களிடம் நாம் பேச முடியாது. “கோட்ட மட்டத்திலாவது கலந்து பேசி TRAINING அனுப்புங்கள்” என சொன்னால், எல்லா விஷயத்தையும், எல்லோரிடமும் கேட்டுக் கொண்டு இருந்தால், ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. நிர்வாகத்தை நடத்த முடியாது என்பது நிர்வாகத்தின் பதிலாக இருக்கிறது.
முதலிலேயே gents-ஐ தான் choose பண்ணி இருக்க வேண்டும் என்பது நம் அபிப்பிராயம். (கடைசி நேரத்தில் போக சொல்லக் கூடாது என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, gents - ladies என பார்ப்பது சரியில்லை என்பது பலரது அபிப்பிராயம்!) இந்த பிரச்சினையில், ஊழியர் MAILஅனுப்பவில்லை, SPM மெயில் அனுப்பவில்லை என நிர்வாகம் சொல்வதில் நியாயம் இருப்பதாக நமக்கு தெரியவில்லை. முதலில் ஊழியர் தொடர்பு கொண்டபொழுது “மெயில் அனுப்புங்கள் பார்ப்போம்” என சொல்லி இருந்தால் பரவாயில்லை. ஆனால், , நீதான் TRAINING போகவேண்டும் என சொல்லிவிட்டு குற்றம் சாட்டுவது சரியில்லை. அதுபோல், SSP-யே தொடர்பு கொண்டு உங்கள் அலுவலகத்தில் இருந்து தான் யாரையாவது ஒருவரை அனுப்பவேண்டும் என சொன்னபிறகு, SPM-மும் மெயில் அனுப்புவது சாத்தியமுமில்லை. எனவே நிர்வாகம் நம் மீது கோபம் கொள்வதிலோ, ஊழியர்களை குறை சொல்வதிலோ நியாயம் இல்லை.
கடந்த பாராவில் குறிப்பிட்டு இருந்தோம் அல்லவா?ஊழியர்களின் மனக்குறை, நிர்வாகத்தின் கோபம், ஒரு சிலரின் குற்றச்சாட்டு, இவையெல்லாம் தீர விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டிய விஷயம் என்பதால் அதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம். மனக்குறையும், கோபமும், குற்றசசாட்டும் சரிதானா? அதில் உண்மை இருக்கிறதா? அதில் நியாயம் இருக்கிறதா? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.
ஆனால், ஒரு விஷயத்தில், நிர்வாகம் சொன்னதில் நியாயம் இருந்ததை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். "உங்களுக்குள் ஒற்றுமையில்லை. உங்களுக்குள் உதவி செய்ய மறுத்து விடுகிறீர்கள். ஆனால், நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என ஓடி வருகிறீர்கள். உதவி செய்ய மறுப்பதாக குற்றம் வேறு சொல்கிறீர்கள். இது சரியா?” என்று கேட்ட பொழுது நாம் தலை குனிந்து தான் நிற்க வேண்டி வந்தது.நம்மிடம் ஒற்றுமை இருந்தால், யாரிடமும் போய் நிற்க வேண்டிய அவசியமில்லை. வேட்க கேடுதான். வேதனைதான். என்ன செய்வது?. இருந்தாலும், ஒரு விஷயத்தை அவரவர் கோணத்தில் தான் பார்க்கிறார்களே தவிர, பிரச்சினை என வரும்பொழுது, அதற்கு தீர்வு காண்பதில் முனைப்பு காட்டுவதில்லை என்பது நிர்வாகத்தின் மீது நாம் வைக்கும் குற்றச்சாட்டு. “பிரச்சினையே இல்லை. பிரச்சினைகளை உருவாக்குவதும், பெரிதாக்குவதும் நீங்கள்தான்” என்பது நிர்வாகம் நம் மீது வைக்கும் குற்றச்சாட்டு. எது உண்மை? "சொல்லில் வருவது பாதி. நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி!.தண்ணீர் தணல் போல் எரியும். செந்தணலும் நீர் போல் குளிரும். நண்பனும் பகை போல் தெரியும். நாட்பட, நாட்படபுரியும்......................."

பின்குறிப்பு: முன்னோக்கி நடந்து சென்றால், இலக்கை எளிதாக அடைந்து விடலாம். ஆனால், பின்னோக்கி நகர்ந்து இலக்கை அடைய வேண்டும் என்றால் கஷ்டம்தான். இப்பொழுது எல்லாமே தலைகீழாக தான் நடக்கிறது. அரசியல் என்பது அடுத்தவர்களை(மக்களை) உயர்த்துவதற்கான உழைப்பு என்பது மாறி, தன்னை உயர்த்தி கொள்வதற்கான பிழைப்பு என்ற நிலை. பதவி என்பது உதவி செய்வதற்கான வாய்ப்பு என்பது மாறி, பலரை ஆட்டி படிப்பதற்கான அதிகாரம் என்ற நிலை. பொதுமக்கள் நலனை பாதுகாப்பதுதான் தன்னுடைய கடமை என்பது மாறி, தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு போராடுவதுதான் தன் வேலை என்பது ஊழியர்கள் நிலை. பொதுமக்கள் சேவைக்கு ஊழியர்கள். ஊழியர் நலனை பாதுகாப்பதற்கு அதிகாரிகள். அதிகாரிகளுக்கு உதவி செய்வதற்கு அரசு என்ற நிலை மாறிவிட்டது. உத்தரவிடுவதற்கு அரசு. உபத்திரவம் தருவதற்கு அதிகாரிகள். போராடுவதற்கு ஊழியர்கள். பாதிக்கப் படுவதற்கு மக்கள் என்ற நிலை. தலை கீழாக இருப்பதை நேராக நிமிர்த்தி விட்டால், நிமிர்ந்து நின்றால் எல்லாம் சரியாகிவிடும். யார் செய்வது? "நமகென்று பூமியிலே கடமைகள் உண்டு. அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று. நமக்காக........................ ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை..................................................”
WHEN GIVEN THE CHOICE BETWEEN BEING RIGHT OR BEING KIND, CHOOSE
KIND.
No comments:
Post a Comment