7வது ஊதிய கமிஷன் பரிந்துரையை கண்டித்து செங்கோட்டையில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
செங்கோட்டை: 7வது ஊதிய கமிஷனில் குளறுபடி உள்ளதாகக் கூறி தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் செங்கோட்டை
ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 7வது ஊதிய கமிஷன் அறிக்கையில் குளறுபடி இருப்பதால் அதனை அகற்ற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குறைந்த பட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் செங்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டிக்கெட் பரிசோதகர் கவுன்சில் சேர்மன் சுலைமான் தலைமையில் செயலாளர் கல்யாணி பாண்டியன் முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்னக ரயில்வே மதுரை கோட்ட தலைவர் ராமசுப்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொழிலாளர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். போராட்டத்தில் தொழிலாளர்கள் 250க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Source : http://tamil.oneindia.com/
No comments:
Post a Comment