பயனுள்ள, 'மிஸ்டு கால்!'
நாங்கள்
புதிய வீட்டிற்கு குடிவந்த பின், சமீபத்தில்
எங்கள் வீட்டு முகவரிக்கு, திருமண
அழைப்பிதழ் தபாலில் வந்தது. அதை தந்த தபால்காரர், 'நீங்க இந்த வீட்டுக்கு புதுசா குடி
வந்திருக்கீங்களாம்மா...' என்று
கேட்டதோடு, என்
கணவர் பெயர், அவர்
பார்க்கும் தொழில் மற்றும் வீட்டில் உள்ள நபர்கள் பற்றி விசாரித்தார். நான்
விபரங்களை சொல்லத் தயங்கிய போது, பக்கத்து
வீட்டு பெரியவர், 'சும்மா
பயப்படாம சொல்லும்மா; இவரு
ரொம்ப வருஷமா, நம்ம
ஏரியாவுக்கு தபால் கொண்டு வர்றவரு. நீ, அவருகிட்ட
விபரத்தை சொன்னா, கொஞ்சம்
முன்னே, பின்னே
முகவரி இருந்தாலும், ஞாபகமா
தந்திடுவாரு...' என்று
கூறினார்.
எனக்கும்
நம்பிக்கை வந்து, குடும்ப
நபர்களை பற்றி கூறினேன். அவர்,
'உங்க மொபைல் எண் அல்லது உங்க கணவர் மொபைல் எண்ணை
சொல்லுங்க. நீங்க வீட்ல இல்லாத நேரம் தபால் வந்தா, 'மிஸ்டு' கால்
தர்றேன். நீங்க எங்கிட்ட அதுகுறித்த தகவல தெரிஞ்சுக்கலாம்...' என்றார்.
என்
கணவரின் மொபைல் எண்ணை தந்ததும், பதிவு
செய்து கொண்டார்.
தபால்காரர்
போன பின், பக்கத்து
வீட்டு பெரியவர், 'இனிமே
நீ வீட்ல இல்லைன்னா கூட உனக்கு தபால் வந்தா, 'மிஸ்டு' கால்
குடுப்பாரு. நீ போன் செய்து, தபாலை
யாருக்கிட்ட தரச் சொல்றியோ, அங்க
தந்திடுவாரு...' என்றார்.
'மிஸ்டு'கால் என்றால் முகம்
சுளிக்க வைக்கும் நிலையில், அந்த தபால்காரரின்
பொறுப்பான செயலை எண்ணி, மகிழ்ந்தேன்.
— எஸ்.அஸ்வினி, சென்னை.
Source : F.B
No comments:
Post a Comment