பரிந்துரையா?பரிகாசமா ?
ஊதியகுழுவே ! உனக்கென்ன
ஊழியர்கள் மேல் இத்தனை கோபம்
வரங்களை கேட்டால் சாபங்களை தந்திருகிறாயே !
வட்டியில்லா அலவன்சுகளை எல்லாம்
வெட்டி மகிழ்ந்திருக்கிறாயே !
பொட்டி பொட்டியாய் கொட்டி கொடுத்தோம் என
பெட்டி கடைதோறும் புலம்ப வைத்திருக்கிறாயே !
தொழிலாளிகளுக்கு அளந்து கொடு
அய்யாக்களுக்கு அள்ளிகொடு --இதுதானே
சம்பளகுழுவின் சாஸ்திரம் --எப்படி
கூட்டினாலும் கூடவில்லை -ஊதியக்குழுவின் சூத்திரம்
ஆண்டு உயர்வும் சமமாக இல்லையே!
ஆளைபார்த்துத்தான் அடுத்தது என்றால் -மீண்டும்
ஆண்டான் அடிமை பிறக்காதா ?
புதைக்கப்பட்ட பிரபுத்துவம் முளைக்காதா?
கோடி கோடியாய் சேர்பவருக்கு வரிச் சலுகை
ஓடி தேடி பிளைப்பவனுக்கு வரி கொடுமை
பழைய அரசாவது தொழிலாளியின் வியர்வையை குடித்தது
புதிய அரசோ உதிரத்தையும் சேர்த்து உறிஞ்சுகிறது
மாத்துரார் கணக்கிலும் பிழை இருக்கிறது --அதை
மாற்றுவதில்தான் நம் பிழைப்பு இருக்கிறது
மாற்றிடவேண்டும் என குரல் ஒலிக்கிறது
மறுபடியும் களம் காண அழைப்பு வந்திருக்கிறது
பரிந்துரையா? பரிகாசமா ? பரிசளிப்பா ? பரிதவிப்பா ?
Matrix மாயஜாலம் அதிகாரிகளுக்கு கை கொடுத்தது
அடிமட்ட ஊழியர்களை கை விட்டது
அடிமாட்டுக்கு காட்டுகிற இரக்கம் -ஏனோ
அரசு ஊழியர்கள் மேல் இல்லையே !
--- ஜேக்கப்ராஜ் ----
Source : http://nfpetirunelveli.blogspot.in/
No comments:
Post a Comment