Monday, 7 March 2016

காப்பாற்றுவோம் கடிதக் கலையை !



தங்கு தடையின்றி அஞ்சலகங்களில் அஞ்சல் அட்டைகள் கிடைத்திட ஆவன செய்திட
சேலம் அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் உயர்திரு. பா.ஆறுமுகம்,அவர்களிடம்
இன்று நான் வழங்கிய கோரிக்கை மனு விபரம் ...


பெறுதல்
உயர்திரு. பா.ஆறுமுகம்,அவர்கள்
முதுநிலைஅஞ்சல்கண்காணிப்பாளர்
சேலம்

அய்யா வணக்கம்,
அஞ்சல் சேவையில் உலகில் முதலிடம் வகிக்கும் நம் நாட்டில்,

எண்ண ஓட்டத்தை, உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும், அழுத்தமாகவும்,பிரதிபலிக்கும் கையெழுத்து வடிவ தகவல் பரிமாற்றம் அழிந்து விடக்கூடாது என்பதாலும் ,

ஒரு மொழியின் வளர்ச்சி என்பது,
அது அதிகம் பேசப்படுவதோடு,அதிகம் எழுதப்படவும் வேண்டும் என்பதாலும்

கையால் எழுதப்படும் கடிதங்கள் பதிவு செய்யப்படாத பத்திரங்கள் போன்றவை அதில் உள்ள எழுத்துக்கள் என்றும் அழியாது பேசும் உயிர்கள் என்பதாலும்..

உண்மையையும் ஒழுக்கத்தையும் மட்டுமே தாங்கிச்செல்லும் எழுத்து வழி தகவல் தொடர்புகள் மக்கள் மத்தியில் வளர வேண்டும் என்பதாலும் ,

எழுத்து வழியில் எண்ணங்களை வெளிப்படுத்தி அன்பொழுக அடுத்தவர்களுக்கு கையினால் கடிதம் எழுதி அனுப்பும் வழக்கம் மிக,மிக, குறைந்து, வளரும் தலைமுறையினர் அதை மறைந்து விடும் நிலை ஏற்பட்ட கூடாது என்பதாலும்,

நமது நாட்டின் பாரம்பரிய கலாச்சார அடையாளமாய் விளங்கும் கையெழுத்து வடிவ கடிதப்போக்குவரத்து அழிந்திடகூடாது என்பதாலும்

மக்களுக்கு கடிதங்கள் எழுதுவதன் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்திட ஏற்படுத்திட

தங்கு தடையின்றி அஞ்சலகங்களில் அஞ்சல் அட்டைகள் கிடைத்திட ஆவன செய்யவும்,

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அஞ்சல்துறை சார்பில் கடிதங்கள் எழுதுவதன் அவசியம்
அதன் சிறப்புக்கள் குறித்த நிகழ்வுகள் போட்டிகள் நடத்திட ஆவன செய்ய வேண்டும் எனவும்,அதன் முலம் நம் நாட்டின் மிகப்பெரிய சேவை நிறுவனமான அஞ்சல் துறை செழித்தோங்கவேண்டும் எனவும்அன்போடு வேண்டுகின்றேன் ...

நன்றி வணக்கம்..
அன்போடு..
ஈசன் இளங்கோ



No comments:

Post a Comment