Tuesday, 5 April 2016

இண்டர்நெட் இல்லாமல் ஸ்மார்ட்போன்களில் இலவசமாக தூர்தர்ஷன் பார்க்கும் வசதி அறிமுகம்

புதுடெல்லி:

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், இலவசமாக டிவி சேனல்களை கண்டுகளிக்க புதிய சேவையை தூர்தர்ஷன் அறிமுகப்படுத்துகிறது. டி.டி.டி. (Digital Terrestrial Television services) என அழைக்கப்படும் இந்த வசதி  டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, கவுகாத்தி, பாட்னா, ராஞ்சி, கட்டாக், லக்னோ, ஜலந்தர், ராய்பூர், இந்தூர், அவுராங்காபாத், போபால், பெங்களூர், அகமதாபாத் ஆகிய 16 நகரங்களில் கடந்த பிப்ரவரி 25-ந்தேதி ஆரம்பிக்கப்பட்டது. 

ஓ.டி.ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லட் கருவிகளில் டிஜிட்டல் வீடியோ பிராட்காஸ்டிங் செய்யும் DVB-T2 டாங்கிள் அல்லது வை-பை டாங்கிள்களை பொருத்தி டிவி சேனல்களை கண்டு ரசிக்கலாம். இந்த டாங்கிள்கள் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களிலும் கிடைக்கின்றன. இதற்கென பிரத்யேக ஆப்ஸ்களை ஸ்மார்ட்போனில் நிறுவினால் டி.டி சேனல்களின் சிக்னலை பெற்று டிவி சேனல்களை காணலாம். 

டாங்கிள் வாங்குவதற்கு மட்டும் செலவு செய்தால் போதுமானது. இதற்கு இண்டர்நெட் எதுவும் தேவையில்லை. தற்போது, டி.டி. நேஷனல், டிடி நியூஸ், டிடி பாரதி, டிடி ஸ்போர்ட்ஸ், டிடி கிசான் சேனல்களை இலவசமாக பார்த்து ரசிக்க முடியும்.

No comments:

Post a Comment