Sunday, 3 April 2016


அன்பு தோழி ஃபினாக்கிலே!
அஞ்சல் துறையின் மருமகளே!
வாழ வந்த ஒரு வருடத்திற்குள்,
வருத்ததை தந்தது ஏன்? - நமக்குள்
இணக்கத்தை தளர்த்தியது ஏன்?
இயலாதவர்கள் என ஏளனமாய் நினைத்தாயோ!பன்னிரண்டு வரை மட்டும் படித்திருந்தாலும் - துணிவாக
உன்னை கையாள களமிறங்கியவர்கள் நாங்கள்!ஏளனங்கள் பலவற்றை எளிதாக கடந்தோமே!ஏன் இன்று எங்களை ஏங்க வைக்கிறாய்?
எங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட்டல் என்ற பெயரில்
எரிச்சல் விலை கொடுத்து வாங்க பட்டிருக்கிறதோ
என்று பயம் வருகிறதே! ஏன்?
வானவில்லாக எங்கள் வானத்தில் நீ வர்ணஜாலம் காட்டினாலும்
வாடிக்கையாளர் சேவை எனும் சூரியனை மறைக்க பார்க்கலாமா?
உன் களத்தில் நாங்கள் பெறுவது வீரத்தழும்புகளே தவிர
புலியைப் பார்த்து பூனைகள் போட்டு கொள்ளும் சூடுகள் அல்ல!
உன்னை நம்பியே நான்!
உன்னை நம்பியே நான்!
மகிழ்ச்சி கொள்ள வேண்டாம் மகளே!
உன்னை பார்த்து சொல்ல வில்லை,!
உன்னை நம்பியே நான்! என்று தினமும்
என்னை பார்த்து சொல்லும் என் மனைவியின்
சாபத்தை வாங்குகிறாய் நீ! கோபத்தை வாங்குகிறேன் நான்!
உலக வங்கிகளை ஒப்பிட்டால் எங்கள் வங்கி என்னவோ
ஒரு இமயம் தான்! ஆனால்……….
எங்கள் இதயமாகிய நீ தடையின்றி துடிப்பது
ஏனோ சில சமயம் தான்!!!
இனி எனக்கு வேண்டாம் நீ!
இனி எனக்கு வேண்டாம் நீ!
இன்னல் கொள்ள வேண்டாம் மகளே!
இப்போதும் உன்னை பார்த்து சொல்ல வில்லை,!
இனி எனக்கு வேண்டாம் நீ! என்று என்
இனிய மனைவி, என்னை பார்த்து சொல்லும் முன்பு
இரவு எட்டு மணிக்காவது நான் வீடு செல்ல
இனியாவது இசைந்து கொடுக்க பழகு!
உன் மெத்தனத்தால் மெதுவாக நாங்கள் இழந்து
கொண்டிருப்பது வாடிக்கையாளர்களை மட்டுமல்ல!
உயிருக்கு உயிராய் எங்களுக்காக காத்திருக்கும்
எங்கள் வீட்டு உறவுகளையும் தான்!

நம்பியிருக்கிறோம் தாயே! நல்கிடு நல்லதொரு வாழ்வை!
தோழர் .M.R.T.ரவிமோகன்.
அஞ்சலக அதிகாரி.
ஆறுமுகநேரி.628202.


9944629702

No comments:

Post a Comment