Tuesday 24 May 2016

விடியலை தேடும்  அஞ்சல் எழுத்தர்கள்



  CBS நெட் வொர்க் பிரட்சினை மீண்டும் ஊழியர்களை பெரும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது .மாநில சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி போராட்ட தயாரிப்புகள் வடித்தெடுத்து ,அதை மாநில NFPE ஒருங்கிணைப்பு மூலம் நடத்துவது என்ற   முடிவுகள் ஏனோ தள்ளி போடப்பட்டுள்ளன .

                         இரவு 8 மணிவரை ஊழியர்கள் கணக்குகளை முடிக்காமல் பரிதவிப்பது ,தான் பணி புரியும் ஊர்களில் நெட் கிடைக்காததால் அத்தனை வவுச்சர்களையும்  எடுத்துக்கொண்டு பெரிய அலுவலகம் தேடி  அகதிகளாக அலைந்து கணக்கை முடிப்பது .வாடிக்கையாளர்களிடம் இன்று போய் நாளை வாருங்கள்  என்று கைகட்டி கெஞ்சுவது .ஏதோ குற்றம் செய்தவர்கள் போல் பொதுமக்களிடம் பதுங்கி பதுங்கி பேசுவது என்று சொல்லன்னா துயரத்தில் ஊழியர்கள் சொல்லவும் முடியாமல் ,மெல்லவும் முடியாமல் அன்றாட அலுவல்களை ஒரு அடிமைபோல்   செய்து வருகிறார்கள் .
         இந்த கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்ட ,,துன்பத்தில் இருந்து ஊழியர்களை மீட்க ,மாநில அஞ்சல் மூன்று சங்கம் நல்லதொரு முடிவினை எடுக்க வேண்டுகிறோம் .
    அடிமட்ட  ஊழியர்கள் மனதில் கனல் --களம் அமைக்க தலைமையை எதிர்பார்த்து  காத்திருக்கிறார்கள்    .எங்கள் கஷ்டங்களை புரிந்து கொண்டு விரைந்து முடிவெடுங்கள் ! ஆம் !பரவட்டும்! .போராட்ட தீ பரவட்டும் !

       புலியாய் தாக்கவா  ? புழுவாய் தாங்கவா ?
                                       
    தோழமையுடன்  SK .ஜேக்கப்ராஜ் 

No comments:

Post a Comment