Commemorative Postage Stamp on "Alagumuthu Kone"
A Commemorative Postage Stamp on "Alagumuthu Kone" has been released by Shri Ravi Shankar Prasad, Hon'ble Minister for Communications and IT at Madurai on 26/12/2015.
வீரத்தமிழன் மாவீரன் அழகுமுத்து கோன்
மன்னர் வீர அழகுமுத்து கோன் (17-10-1759) ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் என்கிற எட்டயபுரம் அரசருக்கு நண்பனாக இருந்தவர். அழகுமுத்து சேர்வைக்காரனின் தந்தை கட்டாலங்குளம் பகுதியை அரசாலும் உரிமையை, மதுரையை ஆண்ட மன்னர் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கர் அவர்களிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று அரசாண்டார்(குடி உயர கோன் உயர்வான்). கப்பம் கட்ட மறுத்து முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்ததாலும் மருதநாயகம் யூசுப்கான்சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டு அதில் வீரன் அழகுமுத்து கோன் மற்றும் 5 படைத்தளபதிகளும் மற்றும் 200 போர் வீரர்களும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டு இறந்தனர். பீரங்கி முன் நின்ற சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் ஆங்கிலேயனுக்கு அடிபணியவும் மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.கொண்டையன் கோட்டை மறவர் குல சேர்வை பட்டத்து தேவர் இன வீரன், இவர்களை கவுரவிக்கும் வகையில், அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் தலை, அஞ்சல் உறை வெளியிடப்படுகிறது. அழகுமுத்து கோன் நினைவு அஞ்சல் தலை, அஞ்சல் உறை, விவரக் குறிப்பேடும் அஞ்சலகங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.
No comments:
Post a Comment