Tuesday, 18 February 2014

மாநில அளவிலான சில செய்திகள் :

அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் ! 


மாநில அளவிலான சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் ! மாநில நிர்வாக அலுவலகத்திலிருந்து உரிய அதிகாரிகளால்  நமக்கு அளிக்கப் பட்ட செய்திகளின் படி இதனை உங்களின் பார்வைக்குத்  தருகிறோம்.

1. LSG  பதவி உயர்வு பட்டியல் வெளியிடுவதில் DATE  OF  CONFIRMATION  என்பது அடிப்படையாகக் கொள்ளப்படும் என்று ஏற்கனவே மாநில நிர்வாகத்தின் முடிவாக அறிவிக்கப் பட்டதை உங்களுக்கு தெரிவித் துள்ளோம். அதன்படி பட்டியல் கோட்டங்களில் இருந்து  பெறப்பட்டு இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறுவதாகவும் எப்படியும் இந்த மாதத் திற்குள் இது நிறைவு செய்யப்படும் என்று  தெரிவிக்கப் பட்டுள்ளது.  

2. ஏற்கனவே HSG I  பதவிகள் நிரப்பப் படாமையால்  நிறைய ஊழியர் களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது என்றும் ,மேலும் இந்த ஆண்டு சுழல் மாற்றல் வேறு செய்ய வேண்டி இருப்பதால் , உடனடியாக  HSG I  பதவிகள் பணி  மூப்பு அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்று கோரியுள்ளோம். இது  உடன் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப் பட்டுள்ளது.

3. LGO  தேர்வு விடைத்தாள்கள் CMC  இலிருந்து  மாநில நிர்வாக அலுவல கத்திற்கு வந்துவிட்டது. இந்த வார இறுதிக்குள்  தேர்வு முடிவுகள் CONSOLIDATE   செய்யப் பட்டு வெளியிடப்படும் என்று  தெரிவிக்கப் பட்டுள்ளது.

4. தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப் பட உள்ளதால் 2011, 2012 இல்  நிரப்பப் படாத காலியிடங்களைச்  சேர்த்து 2013, மற்றும் 2014 க்கான  நேரடி  மற்றும்  LGO  தேர்வுகளுக்கான காலியிடங்கள்  உடனடியாக அறிவிக் கப்பட உள்ளன . அப்படி அறிவிக்கப்பட்டால்  அது அதிகப்படியான காலியிடங்களுக்கான தேர்வாக  இருக்கும்  இதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment