நமக்குள் - பேசி கொள்வோம் -2
மார்கழி மாதம் என்றாலே, மாதவனும், ஆண்டாளும், அவள் அருளிய திருப்பாவையும் பக்தர்களின் நினைவுக்கு வரும். மார்ச் மாதம் என்றாலே TARGETம் TORTUREம் தான் தபால் ஊழியர்களுக்கு நினைவுக்கு வரும். TARGET தரும் TORTURE பற்றி சில மாதங்களுக்கு முன் சுற்றறிக்கையில் குறிப்பிட்டு இருந்தோம்.அதை இங்கே வெளியிட்டுள்ளோம்.
குறிப்பிட்ட இடத்தை, குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று சரக்கை கொடுத்துவிட்டு, பணத்தை, பாராட்டை பெற்று கொள்ளலாம் என்பதற்காக ஒரு மாட்டுக்காரர் படுகின்ற பாட்டை பற்றி குறிப்பிட்டு இருந்தோம். "சாட்டையை சொடுக்கி, சில சமயம் சாட்டையால் அடித்தும், ஓங்கி குரல் எழுப்பி விரட்டியும், காலால் பின்புறம் உதைத்தும், மேடு பள்ளம் நிறைந்த சாலையில், சண்டித்தனம் செய்கின்ற மாடுகளை வைத்து கொண்டு இலக்கை போய் அடைவதற்குள், அவர் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. அந்த மாட்டுகாரரின் தொண்டை வறண்டு போய் விடுகிறது. கை கால்கள் எல்லாம் சோர்ந்து, உடலில் சக்தியே இல்லாமல் போய் விட்டதை போன்று அவர் கஷ்ட பட்டு விட்டார் பாவம்" என சொல்லியிருந்தோம். (ஆம். தபால் அதிகாரிகள் அந்த நிலையில் தான் இருக்கிறார்கள்.) "ஆனால், நுரை தள்ளி கொண்டு இருக்கும் மாட்டை பற்றி நாம் ஒன்றும் சொல்லவில்லையே என கவலை பட வேண்டாம். பணம் கிடைத்தவுடன் மாட்டுக்காரர் மாடுகளை நன்றாக கவனித்து கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால், அந்த மாடுகளை நம்பிதானே அவர் பிழைப்பு இருக்கிறது!" என குறிப்பிட்டு இருந்தோம்.
அடுத்த இலைக்கு பாயசமா? அதிகாரிகளுக்கே வக்காலத்தா? என நினைக்க வேண்டாம். இதுதான் இன்றைய யதார்த்தம்! என்று அன்று சொல்லியதை இங்கு திரும்பவும் நினைவு படுத்தி இருக்கின்றோம்.
EXPLOITATION, அல்லது PUNISHMENT என்று சிறையில் கைதிகளுக்கு அளிக்கப்படும் தண்டனையை பற்றி கேள்வி பட்டதுண்டா? இத்தனை அடி நீளம். இத்தனை அடி அகலம் குழி தோண்டவேண்டும். பிறகு தோண்டிய மண்ணை கொண்டே அந்த குழியை மூட வேண்டும். தினமும் இதேதான் வேலை. செய்யும் வேலையில் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும். அல்லது ஏதாவது, யாருக்காவது பயன் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உற்சாகமும், உத்வேகமும் இருக்கமுடியும். ஆனால், வேலை செய்ய முடியாது என சொல்லவும் முடியாது. (தண்டனை கடுமையாக இருக்கும்). தப்பி செல்லவும் முடியாது. அர்த்தமில்லாத, பயனில்லாத வேலையை செய்யும் கைதியின் மன நிலையை நினைத்து பார்த்ததுண்டா?
அந்த கைதியின் மனநிலையில் தான் தபால் ஊழியர்கள் இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை! ஆம். அடைய முடியாத இலக்குகள். அர்த்தமில்லாத (பயனே இல்லாத) ரிப்போர்ட்கள் , (எத்தனை SPEED, RL BOOK செய்யப்பட்டது, எத்தனை DELIVERY செய்யப்பட்டது ஏன் DELIVERY செய்யப்படவில்லை , என்ன REMARK என்று எதற்கும் உதவாத REPORTS), தேவையில்லாத விளக்கங்கள், விஷயங்கள் இவைகளை செய்ய சொல்லிதானே நாம் நிர்பந்திக்க படுகிறோம்!.நமது நேரத்தை வீணாக்கி கொண்டு இருக்கின்றோம்.
ஏன் ரிப்போர்ட் அனுப்பவில்லை? ஏன் விளக்கம் கொடுக்கவில்லை என அதிகாரிகள் நம்மை கேட்கலாம். ஆனால், கம்ப்யூட்டர் ரிப்பேர், GENSET இயங்கி வருட கணக்கில் ஆகிறது, UPS பழுதடைந்து பல மாதங்கள் ஆகிறது. என்ன செய்யமுடியும் என்றோ?, ஏன் சரி செய்ய பட வில்லை என்றோ? நாம் கேள்வி கேட்க முடியாது, கேட்கவும் கூடாதாம்! கேள்வி கேட்டால் எதிர் விளைவுகளை சந்திக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
டார்கெட் கூடாது என்று நாம் சொல்லவில்லை. ஆனால், அது எந்த அடிப்படையில், எதை நோக்கி அமைக்க பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு வரைமுறை வேண்டும் அல்லவா?
ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்ளவேண்டியதுதான். முதலில் வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டியதுதான். அனைவருமே முதலில் வரமுடியுமா? என எண்ணி பார்க்க வேண்டாம். ஆனால், முதலில் வர தவறி விட்டால், தவறு இழைத்தவர்கள் ஆகி விடுவோமா? என்பதையும், செய்த அனைத்து முயற்சிகளும், இலக்குகளும் பயனின்றி, பலனின்றி போய் விடுமா? அல்லது முதலில் வராவிட்டால் நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கே அர்த்தமில்லாமல் போய் விடுமா?என்பதை மட்டும் இந்த அதிகாரிகள் சிந்தித்து பார்த்தால் போதும்.
"கடமையை செய். பலனை எதிர் பாராதே" என்ற கீதையின் வாசகத்தை அனைவரும்அறிவார்கள். கடை பிடிக்க முடியாவிட்டாலும், அதன் அர்த்தமும் அனைவருக்கும்தெரியும். ஆனால், "விளைவை பற்றியே (TARGET) சிந்திப்பவர்கள், விவேகத்தை இழந்துவிடுகிறார்கள். பிறகு, செய்ய கூடாத காரியத்தை(TORTURE- ஆளுக்கு ஐந்து கணக்கு, அதிகம் அல்லது நஷ்டம் என்றாலும் பரவாயில்லை உன் வீட்டு மற்றும் பக்கத்து மற்றும் EB BILL , தினம் ஒருE-Post, RPLI, PL என்று அனைத்து பிரிவுகளிலும், வழிகளிலும் தாக்குதல்) எல்லாம்செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்". என்ற காந்திஜியின்வார்த்தையை அனைவரும் அறிவார்களா? என தெரியவில்லை. அதன் அர்த்தத்தை,அனர்த்தத்தை புரிந்து கொண்டு செயல்பட்டால் அது இலாகாவுக்கு நன்மை. புரிந்து செயல் படவேண்டும் என்பதுதான் நம் வேண்டுகோள். " சொல்லுரதை சொல்லிபுட்டோம்,...... கெட்டதுன்னாவிட்டுடுங்க ... எல்லாம் தெரிந்திருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க" என்ற சந்திர பாபுவின்பாடலை சொல்லி நிறைவு செய்கிறோம்.
குறிப்பு: TORTURE என்ற பெயருக்கே இடமில்லை, MOTIVATION தான் செய்துகொண்டிருக்கின்றோம் என்பதுதான் நிர்வாகத்தின் பதிலாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். MOTIVATION என்றால் ஒருவரிடம் இருக்கும் திறமையை, சிறப்பை வெளி படுத்துவதற்கானவாய்ப்பை ஏற்படுத்தி தருவது தான் .ஆனால், டார்கெட் என்பது தனி மனிதன் கையிலா இருக்கிறது?. அரசின் கொள்கை முடிவுகள் (வட்டி விகிதம்) பொது மக்களின்(நிதி நிலைமை , விருப்பம்) பங்களிப்பு, அதிகாரிகளின் ஒத்துழைப்பு என்ற பல்வேறு காரணங்கள் இருக்கிறது அல்லவா? அதில் ஊழியர்களை மட்டும் வற்புறுத்துவதும், வறுத்தெடுப்பதும் TORTURE அல்லாமல் வேறு என்னவாம்? தூங்குபவர்களை எழுப்பி விடலாம். ஆனால், .......
பின்குறிப்பு :கார் ரெடியாக இருக்கிறது. DRIVERம் தயாராக இருக்கிறார். PETROL TANK FULL. பயணம் செய்பவர்களும் ஏறி அமர்ந்து விட்டார்கள். ஆனால், ஒரு TYRE PUNCTURE என்றால் (பழுது பட்ட இயந்திரங்களை சரி செய்து விட்டு அல்லவா விரட்ட வேண்டும் ) எத்துனை விரட்டினாலும், மிரட்டினாலும் காரை இயக்க முடியுமா? இலக்கைத்தான் அடைய முடியுமா? PUNCTURE பார்க்க பணமில்லை. நேரமும் இல்லை. (NO FUND. NO HAND. ACHIEVE TARGET) எனவே காரை எடுங்கள் என்று சொன்னால்...? காரை தள்ளி கொண்டே போகலாம்!. இலக்கை கூட அடைந்து விடலாம்!!. ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள்.....???
-NFPE TUTICORIN DIVISION

திட்டங்களும் சட்டங்களும்
"இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞான தங்கமே! அவர் ஏதும் அறியாரடி ஞான தங்கமே!" என்று உள்ளத்தின் உள்ளே கடவுளை வெளியில் தேடும் மனிதர்களை பற்றிய பாடல் ஓன்று உண்டு.
அதை போலே சிறப்பாக இயங்கி கொண்டிருக்கும் நமது இலாகாவை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டிய அரசும், நிர்வாகமும், சிறப்பாக நடத்தும் வழி தெரியாமல், அதை சீரழிக்கும் வகையில் பல செயல்களை செய்து வருகிறது. புலியை பார்த்து பூணை சூடு போட்டு கொண்ட கதையாய், CBSஎன்றும் , NETWORKING என்றும் புதிய திட்டங்கள் கொண்டுவர படுகின்றன. இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிப்பதற்கு ஆசை பட்டு இருப்பதையும் இழந்த கதையாய் ஏதேதோ மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இருக்கின்ற சேவையை சிறப்பாக செய்து வந்தாலே வாடிக்கையாளர்கள் நம்மை தேடி வருவார்கள். ஆனால், ஆட்களை குறைத்து விட்டு, L1, L2 என்று தபால் பட்டுவாடவை தாமதப்படுத்தி கொண்டு தினம் ஒரு பார்சல், ஒரு RPLI , ஒரு SB, ஒரு epost, என்று புதிது புதிதாக திட்டங்களை கொண்டு வந்து ஏற்கனவே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் ஊழியர்களை மேலும் வதைத்து கொண்டு இருக்கிறார்கள். TORTURE-குறைந்தாலே எல்லோரும் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதுதான் தொழிற்சங்கத்தின் கருத்து.
-NFPE TUTICORIN DIVISION
THANKS FOR PUBLISHING THIS MATTER AT YOUR BLOGSPOT.
ReplyDeleteP. SANKARA NARAYANAN. DIVL.SECRETARY. TUTICORIN. 9442180939